கொழும்பில் பயங்கர விபத்து சம்பவம்: பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!
கொழும்பு மாவட்டம் - ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (28-06-2023) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் பரிசோதகரை எதிரே வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகரான, பாணந்துறையைச் சேர்ந்த ஜகத் சமிந்த பெரேரா என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.