கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

Colombo Sri Lanka Police Investigation Crime Murder
By Shankar Jul 09, 2024 04:09 PM GMT
Shankar

Shankar

Report

கொழும்பில் உள்ள அதுருகிரியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்! | Colombo Gun Shot Businessman Murder Investigation

மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் பணத்தை தருமாறு கோரியுள்ளார்.

ஆனால், அந்த பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர் இருப்பினும் அது தோல்வியடைந்துள்ளது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்! | Colombo Gun Shot Businessman Murder Investigation

இவ்வாறானதொரு பின்னணியில், கிளப் வசந்த அதுருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 03 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்திக்கொள்ளும் திறன் கொண்டவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்! | Colombo Gun Shot Businessman Murder Investigation  

இதன்படி, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

டுபாயிலிருந்து அவரது வங்கிக் கணக்கில் 10 இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tattoo நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் Tattoo நிலைய உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்! | Colombo Gun Shot Businessman Murder Investigation

அழைப்பை ஏற்று கிளப் வசந்த, அவரது மனைவியும் பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 வினாடிகளில், சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் ஒருவர் உயிரிழந்தனர்.

கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே. சுஜீவா மற்றும் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே.சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுடப்பட்ட கே.சுஜீவாவின் ஒரு கால் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் அவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளப் வசந்தாவின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்தவின் மனைவி நேற்று இரவு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த நிலமொன்றில் இருந்து கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரியில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புலத்சிங்கள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வேன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற கார் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US