பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு சிறுவர்களால் கூட்டாக நடத்தப்பட்ட கொடூரம்
ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அ ந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர். இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

கூட்டு பாலியல் வன்கொடுமை
பின்னர் மது போதையில் அவர்கள் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், சம்பந்தப்பட்ட 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றபோதுதான் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது