தொலைபேசியில் மூழ்கிய முச்சக்கர வண்டி சாரதி; நேர்ந்த விபரீதம்
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து நோர்வூட் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, எதிர்த்திசையில் மஸ்கெலியா சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி டிக்கோயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசியில் உரையாடியவாறு அதிவேகமாக பயணித்ததால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துடன் மோதியிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.