ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இடமாற்றம் விவகாரம்: வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

TNGovt Nilgiris Innocent Divya DistrictCollector Annaamalai
By Shankar Nov 29, 2021 11:29 PM GMT
Shankar

Shankar

Report

இந்திய ஆட்சி பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்த சம்பவமும் அதனை தொடர்ந்து பலர் முக்கிய விவகாரங்களை மத்திய அரசிற்கு அனுப்பியதும் வெளிவந்துள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா (J.innocent Divya) மாற்றப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த அறிக்கை பின்வருமாறு,

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், நேர்மை தவறி செயல்படுகின்றனர் என்பதற்கு, நீலகிரி ஆட்சியராக இருந்த திவ்யா மாற்றம் ஒரு உதாரணம்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை (Annamalai) குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது,

நாட்டின் முதல் உயிர்ச் சூழல் மண்டலமாக, ‘யுனெஸ்கோ’ (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்ட பகுதி நீலகிரி. அது, பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. அங்கு தான், அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள் உள்ளன.

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருக்கும் வனப்பகுதிகளில், உணவு, நீர் நிலை, இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக குறிப்பிட்ட வலசை பாதைகளை, யானைகள் காலம் காலமாக தங்கள் வழித்தடங்களாக பயன்படுத்தி வருகின்றன.

‘ஹார்ட் ஆப் தி எலிபென்ட் காரிடார்’ (Heart of the Elephant Corridor) என்று சொல்லப்படும், முதுமலைப்பகுதியில் இருக்கும் யானைகள் வழித்தடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதிகளவில் சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்கள் கட்டப்பட்டு உள்ளன.

இதனால், யானைகளின் வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளன. இதை உயிரின பாதுகாவலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். யானைகள் வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ல் வழக்கு தொடர்ந்தார்.  

மேலும், நீலகிரியின் முதுமலையை சுற்றிலும் உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும், 7,000 ஏக்கர் பரப்பளவில், 821 சுற்றுலா விடுதிகள் யானைகள் வழித்தடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தற்போது, இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானைகள் வழித்தட மீட்பு குழுவில் முக்கியமானவரான இருக்கும் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை, அந்த பணிகள் முடியும் வரை அங்கிருந்து மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, யானைகள் வழித்தட வரைப்படத்தையும், அறிக்கையையும் இன்னசென்ட் திவ்யா தயார் செய்தார். யானைகள் வழித்தடம் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ரிசார்ட்களையும், கட்டடங்களையும் கண்டறிந்து, அந்த விஷயங்களை அறிக்கையில் இடம் பெற செய்து, அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வரைபடம் உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டால் யானைகள் வழித்தட வரைப்படத்தையும், அறிக்கையையும் இன்னசென்ட் திவ்யா தயார் செய்தார். யானைகள் வழித்தடம் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ரிசார்ட்களையும், கட்டடங்களையும் கண்டறிந்து, அந்த விடயங்களை அறிக்கையில் இடம் பெற செய்து, அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வரைபடம் உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டால், யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டாக வேண்டும். அதனால், விதிகளை மீறி கட்டடம் கட்டியவர்கள், வரைபடத்தில் தங்கள் கட்டடம் இடம் பெறாமல் இருக்க, உள்ளூர் அரசியல்வாதிகள் வாயிலாக,  திவ்யாவை அணுகி உள்ளனர்.

ஆனால், யாருடைய சிபாரிசையும் ஏற்காமல், உச்ச நீதிமன்றத்தில் தன் அறிக்கையை திவ்யா தாக்கல் செய்து விட்டார். இந்நிலையில் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தி.மு.க.,வின் மேல் மட்டத்தில் இருக்கும் பலரையும் பிடித்து, திவ்யாவை அங்கிருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரிசார்ட் உரிமையாளர்களும், தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் முயற்சித்துள்ளனர்.

இதேவேளை பலர், திவ்யாவை மிரட்டி உள்ளனர். ‘வீட்டில் இருப்போரை கடத்துவோம்’ என்றுகூட கூறியுள்ளனர். இதனால், தன் உடல் நிலையை காரணம் காட்டி, திவ்யா நீண்ட விடுப்பில் சென்றார். நவ., 5ல் பணிக்கு திரும்ப முயற்சித்த போது, அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், அவர் விடுப்பை நீட்டித்து விட்டார்.

ஏற்கனவே, இந்த பிரச்சனை முடியும் வரை, திவ்யாவை இடம் மாற்றம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால், நிர்வாக காரணங்களுக்காக ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் திடீரென மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உடனே, வழக்கு போட்டவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்ட நீதிமன்றம், நீலகிரி ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கி விட்டது.

இதனை தொடர்ந்து, அவசர அவசரமாக திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டு, அம்ரித் என்பரை நீலகிரி மாவட்ட ஆட்சியராக அறிவித்து, அவரும் உடனடியாக பதவி ஏற்று விட்டார். இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டால், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களையும், ரிசார்ட்களையும் காப்பாற்றி விடலாம் என்று தொழிலதிபர்களும், ரிசார்ட் உரிமையாளர்களும், அவர்களால் பலன் அடையும் ஆளும்கட்சியினரும் நினைக்கின்றனர்.

இந்த விடயத்தை, தமிழக பா.ஜ., பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இந்த விவகாரத்தில், இனி பா.ஜ.க., தனி கவனம் செலுத்தும். எங்கும் தவறு நடக்காதபடி பார்த்து கொள்ளும். புதிய ஆட்சியர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதும் கண்காணிக்கப்படும். தவறு நடந்தால், உடனே தட்டிக் கேட்போம்.

அதற்காக, சட்ட போராட்டம் நடத்தவும் தயார். அது மட்டுமல்ல, நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட சுற்றுலா விடுதிகள் பலவற்றை, இன்னசென்ட் திவ்யா மூடிசீல் வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில், கட்டடம் கட்டும் அனுமதி கொடுக்கும் அதிகாரம் ஊராட்சி மன்றங்களுக்கு இருந்திருக்கிறது. அதை மாற்றி, கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுத்தினார்.

இதனால், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும், சம்பாதிக்க முடியாமல் போனதால், திவ்யாவை மாற்ற துடித்துள்ளனர். ஆளும் கட்சியினருக்கும், சட்டவிரோத கும்பலுக்கும் இணக்கமாக செல்லவில்லை என்பதால், திவ்யாவை மாற்றி உள்ளனர்.  

அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக அரசு மாற்றிடம் வழங்கவில்லை. இதுவும் ஒரு அதிகாரிக்கு இழைத்திருக்கும் துரோகம் தான்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, இப்படிப்பட்ட அராஜகங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது தான். அதற்காக, எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, பா.ஜ., கடந்து போகாது.இவ்வாறு அவர் கூறியதாக தம்ழிக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

இன்னொசண்ட் திவ்யா நீண்ட விடுப்பில் செல்ல காரணம் என்ன? நடந்தது என்ன என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன, ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் 12 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அனைத்து விவகாரங்களையும் சேகரித்து அனுப்பி இருப்பதாகவும் விரைவில் மிக பெரிய பிரளயமே ஏற்படலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.  



4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US