எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் இப்படியும் வசூல்!
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் கழிப்பறையைப் பயன்படுத்தியமைக்காக அவரிடம் 100 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற , குறித்த நபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அருகிலுள்ள கடைக்குச் சென்று தனது தேவையைத் தெரிவித்துள்ளார்.
அங்கு கடை உரிமையாளர் கடைக்குப் பின்னாலுள்ள கழிப்பறையை பயன்படுத்த அனுமதி வழங்கினார். இதனையடுத்து அவர் கடைக்காரரிடம் நன்றி கூற முற்பட்டபோது, கடைக்காரர் கழிப்பறை பயன்படுத்தியதற்காக அவரிடம் ரூ.100 கேட்டுள்ளார்.
திகத்துப்போன நபர் பின்னர் கடை உரிமையாளரிடம் 100 ரூபாவைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.