திடீரென பொழிந்த பணமழை; ஓடிஓடி எடுக்கும் மக்கள்; வைரலாகும் காணொளி!
இந்தியா - குஜராத் மாநிலத்தில் மெக்சனா மாவட்டம், அகோல் கிராமத்தில் திருமண நிகழ்வொன்றில் மணமகன் வீட்டார், தமது வீட்டின் மாடியிலிருந்து பெருந்தொகையான நாணயத்தாள்களை வாரியிறைத்த சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. மணமகன் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால் அவரது திருமணம் விமர்சையாக இடம்பெற்றது.
இந்தநிலையில், மணமகனின் வீட்டுக்கு புதுமண தம்பதிகள் வந்தபோது, மணமகனின் குடும்பத்தினர் தங்களது வீட்டின் முதல் மற்றும் 2 ஆவது மாடியில் இருந்து இவ்வாறு வாரியிறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gujarat के मेहसाणा जिले में पूर्व सरपंच के भतीजे की शादी में लाखों रुपए हवा में उड़ा दिए गए।
— Shubhankar Mishra (@shubhankrmishra) February 18, 2023
- 100 और 500 के उड़ाए गए नोट।
- वीडियो सोशल मीडिया पर तेजी से Viral हो रहा है। pic.twitter.com/JG6CKFJ38C
இதன்போது, காற்றில் பறந்த 100 மற்றும் 500 ரூபா நாணயத்தாள்களை, கிராம மக்கள் முண்டியடித்து அள்ளிச்சென்றுள்ளனர்.
அதேவேளை சூபர் ஸ்டாரின் ரஜனியின் சிவாஜி படத்திலும் இது போன்றதொரு காட்சி அதாவது வில்லனின் பணத்தை இவ்வாறு மழைபோல பொழிய செய்திருந்த காட்சி உள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.