உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்புகளில் போடப்பட்ட குறியீடு...அரசாங்கம் விடுத்த வேண்டுகோள்
உக்ரைன் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் போடப்பட்டுள்ள குறியீடானது ரஷ்யா தாக்குதலுக்கான குறியீடாக இருக்கலாம் எனவும் அதனால் அவற்றை அழித்துவிடுமாறு அந்நாட்டு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ்வைச் சுற்றியுள்ள பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடு ரஷ்ய இராணுவத்தால் குறிக்கப்படலாம் என்றும், குறியீடு அமைந்துள்ள பகுதிகளை ரஷ்யா குறிவைக்கக்கூடும் என்றும், அத்தகைய குறியீடுகளைக் கண்டால் உடனடியாக அழிக்க அல்லது மறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், அத்தகைய குறியீடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகப் புகாரளிப்பது நல்லது.