பிரித்தானிய கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தென்னம் கன்றுகள்!
பிரித்தானியாவில் உள்ள பெரும்பால கடைகளில் தென்னம் கன்றுகள் இருப்பதாக இலங்கையை சேர்ந்த நபர் முகநூலில் தெரிவித்துள்ளார், மேலும் இதுகுறித்து புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
நம் மண்ணின் கலாசாரத்திலும் பண்பாட்டிலும் முக்கிய இடம் பெறும் தென்னம் பொருட்கள் இன்று மேலைத் தேய நாடுகளின் மக்களின் வாழ்விலும் குறிப்பாக உணவுப் பொருளாய் முக்கிய இடம் பெற்றுள்ளமையை இங்குள்ள பெரும் கடைகளில் அவதானிக்க முடிகிறது.

ஒரு பெரும் கடையில் தென்னங் கன்றுகள் விற்பனைக்காக இருந்ததைப் பார்த்து மனம் என் கிராமத்தையும் எங்கள் சேனையூர் பணிவு வளவையும் நோக்கி பயணித்தது.
அந்த நாட்களில் தன்னட்டவாரம் முளைற்றுக் கிடக்கும் தென்னம் பிள்ளைகள். முளை விட்ட காய்களை உடைத்து பூரான் சாப்பிட்ட நினைவுகளும் என்னுள் இருப்பதாக இலங்கையர் தெரிவித்துள்ளார்.

ஒரு கன்று இலங்கை விலையில் மூவாயிரம் ரூபாய் வருகிறது
எங்கள் ஊரில் தென்னம் கன்று தென்னம் பிள்ளை என்று அழைக்கும் பண்பாடு என முகநூலில் இலங்கையர் பாலசிங்கம் சுகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.