தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம்!
எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க , பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது. பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் கள் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான 100 % எண்ணெயை உற்பத்தி செய்வதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிகையில் அவர் இதனைத் கூறினார்ர். அதேசமயம் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்க்கான வரிசையை உருவாக்க முயற்சிப்பதாகவும், பொது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவடன், அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்துமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் கள் தமது உற்பத்தியை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.