கொழும்பு இளைஞர் கொலையில் உடந்தையாக இருந்தவர் கைது
கொலைச் சம்பவம் ஒன்றுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (2) அதிகாலை கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உளுதாகொட பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் 23 வயது இளைஞன் ஒருவர் நேற்று (1) வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர் காணாமல் போனவர்
இந்நிலையில் இளைஞனின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த நபர், கல்கிஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 52 வயதுடைய, கல்கிஸ்ஸவில் உள்ள சாந்த ரீட்டா வீதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கல்கிஸ்ஸ உளுதாகொட பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர் காணாமல் போன நபரே என்பது தெரியவந்தது.
மேலும் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.