மறைந்த TVK எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் உடலை சுமந்த சிஎம் விஜய்
மறைந்த கொளத்தூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 72 நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த வி.எஸ். பாபு, நவம்பர் 19, 2026 அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இன்னிலையில் இன்று நவம்பர் 20, 2026 அன்று பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து திரு.வி.க. நகர் தாங்கல் மின்மயானம் நோக்கி இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
த.வெ.க. கொடி போர்த்தப்பட்ட வி.எஸ். பாபுவின் உடலை, அவரது உறவினர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் தனது தோளில் சுமந்து சென்றார்