இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் ; சூடாகி கனிமொழி கூறிய பதில்!
இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம், தவெக தரப்பு முன்வைக்கும் இந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி
இதற்கு பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் எந்த குறிக்கோளும் இல்லை என்றார்.
மேலும், கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோது, ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்பே மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.
தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெளியாகும் போது காங்கிரஸ் தரப்புதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இன்னிலையில் கனிமொழியின் இந்த பதில் தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்தான விவாதங்களை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கியுள்ளது.