கிளப் வசந்தவின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி தொடர்பில் பரபரப்பு தகவல்!
கொழும்பு - அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோத துப்பாக்கி என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரு சம்பவம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.