கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ; 76 இராணுவ வாகனங்கள் மறுசீரமைப்பு
இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது .
மறுசீரமைக்கப்பட்ட 76 வாகனங்கள் இன்று (24) முதல் உத்தியோகபூர்வமாக இராணுவத்தின் செயற்பாட்டுக் குழுவில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும்
இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுரவின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் படி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மறுசீரமைப்புத் திட்டம், இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படைப்பிரிவால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது.
இராணுவ வட்டாரங்களின்படி, இந்த முயற்சி வாடகை வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைப்பது மட்டுமல்லாமல், புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் உதவும்.