பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் ; 7 பேர் கைது!
களுத்துறை - நாகஸ்ஹந்திய பகுதியில் பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கும் வகையில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் உள்ளிட்ட 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று பிற்பகல் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், குறித்த பாடசாலையின் தரம் 10 இல் கல்வி கற்கும் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதலை தடுப்பதற்கு களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் உள்ளிட்ட சிலர் முற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.