திருமண மண்டபத்தில் வெடித்த மோதல் ; தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி

Nuwara Eliya Sri Lanka Police Investigation Crime
By Vironika Jun 17, 2026 03:45 PM GMT
Report

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குழுவொன்று கலந்து கொண்டிருந்த திருமண விழாவில் இன்று மாலை சுமார் 4.00 மணியளவில் மதுபோதையில் இருந்த இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

திருமண மண்டபத்தில் வெடித்த மோதல் ; தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி | Clash Erupts Inside Wedding Hall

 மேலதிக விசாரணை

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகளை மீட்கும் நோக்கில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களும் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பெரும் முயற்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?

ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?

மேலும், சம்பவத்தை நேரில் கண்ட பிரதேச மக்கள், தாக்குதலில் ஈடுபட்ட பிற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸாருக்கு உதவி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட மூவரும், தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் கொட்டகலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா! மனைவி விடுத்த உருக்கமான கோரிக்கை

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா! மனைவி விடுத்த உருக்கமான கோரிக்கை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US