யாழில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ; தீக்கிரையான மோட்டார் சைக்கிள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனி நபர்களுடைய நேற்றைய தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனிநபர்களது இரு பிரிவுகளாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.