அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: பொலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் வைத்தியசாலையில்!
அனுராதபுரம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெப்பித்திக்கொள்ளாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்று (28-10-2023) வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்தப் பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்தப்பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதையடுத்து இப்படியும் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றபோது பௌத்த பிக்குவை அனுப்பி வைக்க முற்பட்ட போது பொலிஸாரை தாக்கியத்துடன் கடமைக்கும் இடையூறு விளைவுத்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகதவன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 2 பொலிஸார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்த நிலையில் கெப்பித்திக்கொள்ளாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் தெரிவித்தனர்.