மரண வீட்டில் இரவு ஏற்பட்ட மோதல்... வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்! அதிர்ச்சி சம்பவம்
மொனராகலை, பிபில - மஹியங்கனை பிரதான வீதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (10-08-2024) குறித்த பகுதியில் உள்ள மரண வீடொன்றில் இரவு 11 மணியளவில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் மரண வீட்டில் ஏற்பட்ட கைக்கலப்பில் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதோடு பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ரிதிமாலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஆர்.வீரகோன தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.