கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமைகோரிய நபர் இவர்தான்
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கெஹெல்பத்தர பத்மே உரிமைகோரியுள்ளது.
இதோ, நாங்கள் அவனை கொன்றுவிட்டோம் என சஞ்சீவ கொல்லப்பட்டவுடன் வானொலி நிலையத்திற்கு துபாயிலிருந்து கெஹெல்பத்தர பத்மே என்பவர் அழைப்பு எடுத்து தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதோடு இந்த உரையாடலின் ஒலிப்பதிவு பெலும்கல வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
நேற்றையதினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கு ஒன்றுக்காக அழைத்துவரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.