யாழில் கடமையின்போது மதுபோதையில் பயணிகளை தாக்கிய அரச ஊழியருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம், காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையில் பயணிகளை மதுபோதையில் அரை நிர்வாணமாக தாக்கிய வீதி அபிவிருத்திச் சபையின் பாதைப் பணியாளர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைதான நபர் இன்று (26-07-2023) புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று கடமை நேரத்தில் பாதைச் சேவையில் ஈடுபடாமல் மது போதையில் நின்று படகு ஓட்டுநரைத் தாக்கிய மற்றைய பணியாளரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அவருக்கு நீதிமன்று 100 மணித்தியாலங்கள் சமூகசேவைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திகள்
யாழில் மதுபோதையில் கடமையில் இருந்த அரச பணியாளரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!