தண்ணீரில் மூழ்குமா சென்னை மாநகரம்? வெளியான புகைப்படங்கள்
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும்மழை பெய்துவரும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதனால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளதால் தாழ்வான இடங்கள், சுரங்கப்பாதை வழியாக பேருந்துகள் இயக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



