தமிழக முதலமைசராகும் விஜய்க்கு மோகன் லால் , மம்மூட்டி, மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற விஜய்க்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மோகன் லால் , மம்மூட்டி, மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .

கீர்த்தி சுரேஷ்
ஜோசப் விஜய் சார், இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்களைத் தளபதி என்று அழைக்கும் கடைசி முறை இதுதான். வெறுப்புகளை கடந்து மக்கள் மீது கொண்ட பற்றக்காக கிடைத்த இந்த வெற்றி, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்.
பூஜா ஹெக்டே '
Thalapathy kacheri is just getting bigger and bigger'எனக் குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர்
தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே வெற்றிப்படி கட்டு, அதை எட்டு என்று எட்டிப் பிடித்திருக்கும் தொகுதிகளோ 108. வெற்றிக்கனியை தட்டி பறித்திருக்கும் நண்பர் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன்.
மோகன் லால்
பொதுமக்கள் உங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே, மிகப்பெரிய கெளரவம். மம்மூட்டி - மாநிலத்தை வழிநடத்தும் மனவலிமை த.வெ.க தலைவர் விஜய்க்கு கிடைக்க வாழ்த்து.
மகேஷ் பாபு
புதிய அளவுகோல்களை அமைத்து, ஒரு பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டிய நடிகர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பார்த்திபன்
வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’சொல்வதைப்போல, விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது
பா.ரஞ்சித்
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
வைரமுத்து
வெற்றி பெற்ற விஜய் அவர்களே, கலை உலகின் சக பயணி என்ற முறையில் உங்களை வாழ்த்துகிறேன். உலகத் தமிழர்கள் உற்றுப் பார்க்கும் வெற்றி உங்களுடையது வெற்றி - தோல்வி இரண்டுமே பாரங்கள் தோல்வி என்பது முதுகில் சுமக்கும் பாரம்; வெற்றி என்பது தலையில் சுமக்கும் பாரம் சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் முன்பே மக்களுக்கு நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் அந்த வாக்குகளை நிறைவேற்றுவதில் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் மாட்சி உங்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் வாழ்த்துக்கள்.