ஏராளமான கொலைகள், கடத்தல்கள் ;பிள்ளையானின் சகாக்களை தேடி தொடரும் நடவடிக்கை
பிள்ளையானின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏராளமான கொலைகள், கடத்தல்கள்
இந்நிலையில் பிள்ளையான் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி எனப்படும் கே. புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில் இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
இவர்கள் இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்டனர்.
2007-2008 காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு , மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்து வந்தனர்.
அக்காலத்தில் ஏராளமான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களை பிள்லையான குழு செய்த சம்பவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.