மீண்டும் அருட்தந்தை சிறில் காமினிக்கு அழைப்பு விடுத்துள்ள சி.ஐ.டி!
அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை எதிர்வரும் 22 ஆம் திகதியன்று மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருமாறு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கலந்துரையாடலொன்றின் போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட்தந்தை சிறில் காமினி அடிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த இரு தினங்கள் வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை தொடர்ச்சியான மூன்றாவது நாளான இன்றைய தினமும் வருமாறு அருட்தந்தை சிறில் காமினி அடிகளாருக்கு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்தனர்.
மேலும், இவ்வாறு தொடர்ச்சியாக 3வது தினமும் சி.ஐ.டி.க்கு வருவது மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என நேற்று சி.ஐ.டியினருக்கு அருட் தந்தை சிறில் காமினி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வரும்படி சி.ஐ.டியினர் அருட்தந்தைக்கு கூறியுள்ளனர்.