சர்ச்சையை ஏற்படுத்திய சாணக்கியன் செயல்! வெடித்தது புதிய சர்ச்சை
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வீழாவொன்றில் ஆன்மீக பெரியவர்களுடன் அமைந்திருக்கையில், கொஞ்சமும் அவர்களை மதிக்காது கால்மேல் கால்போட்டு அமர்ந்துதிருந்தமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் முக்கியஸ்தர் குணாளன் தனது முகநூல் பதிவில்,
போர்த்துக்கீசர் சைவ ஆலயங்களையும் , சைவ மக்களையும் அழித்த வரலாறு படித்திருப்பீர்கள். சாணக்கிய ராகுல ராஜபுத்திரன் எனும் இவரும் ஓர் போர்த்துக்கீசர் என்று இன்னமும் பெரும்பாலானவர்கள் அறியவில்லை .
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடக சந்திப்பொன்றில். தனது தாயார் சிங்களவர் அல்ல அவர் கண்டியைச் சேர்ந்த போர்த்துக்கேயர் என்றும் அதன் காரணமாகவே தனது தோல் வெள்ளையாக காணப்படுவதாகவும் இருபது வயதிலேயே தலையில் முடி இல்லாமல் போய்விட்டதாவும் கூறியிருந்தார்.
ஆகவே இவ்வாறான ஒரு நபரிடமிருந்து சைவக் குருக்களுக்கான மரியாதையை எதிர்பார்ப்பது தவறுதான். அதேசமயம் சாணக்கியன் மும்மொழிகளிலும் ஆளுமைமிக்கவரென்று பிரச்சாரம் செய்யப்படுகிறதாகவும், அவரால் தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியாது என பதிவிட்டுள்ளார்.