யாழ் பகுதியில் வீட்டை உடைத்து நகை திருட்டு! சிக்கிய முக்கிய சந்தேக நபர்
சுன்னாகம் - உடுவில் - மல்வம் பகுதியில் வீட்டை உடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இன்றையதினம் மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுயடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் மற்றும் மல்வம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.