இளவரசர் பிலிப் குறித்து முதல் முறையாக உருக்கமாக பேசிய பிரித்தானிய மகாராணி!
பிரித்தானியா மகாராணி எலிசபெத் (Queen Elizabeth) இன்று மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய நிலையில், அவருடைய முகத்தில் வழக்கமான சிரிப்பை பார்க்க முடியவில்லை. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தின விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரித்தானிய மக்களும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதேவேளை, மகாராணி எலிசபத் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் தன்னுடைய மறைந்த கணவர் பிலிப் மற்றும் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பிரித்தானியா மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியும். நம்மில் அன்புக்குரியவை இழந்தால், அதன் பிரிவு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனது கணவர் பிலிப் (Prince Philip) இறந்த சில மாதங்களிலே நான் காமென்வெல்த் மாநாடு, சிலரின் அரவணைப்பு மற்றும் பாசம் போன்றவைகளால் நான் மிகுந்த ஆறுதலைப் பெற்றேன். குறிப்பாக அவருடைய சேவை உணர்வு, அவருடைய ஆர்வம், குறும்புத்தனம் போன்றவைகளை மறக்க முடியாது. நானும் என்னுடைய குடும்பத்தினரும் அவருடைய பிரிவால் உள்ளோம்.

இருப்பினும் எனது கணவர் பிலிப் நாங்கள் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட வேண்டும் என்று தான் நினைப்பார். தற்போது கொரோனா மீண்டும் பரவி வருவதால், நாம் விரும்பியபடி கொண்டாட முடியாது என்றாலும், நாம் அதை பல மகிழ்ச்சியான விஷயங்களை (கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது, பரிசுகளை வழங்குவது போன்றவை) அனுபவிக்க முடியும்.
இதேவேளை, பெரியவர்கள் நாம் கவலையில் இருக்கும்போது, சில சமயங்களில் குழந்தைகளின் மூலம் நாம் மகிழ்ச்சிகளை பார்க்க முடியும். ஆனால் அதை சிலர் கவனிக்க தவறவிட்டு விடுகின்றனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும், இந்த ஆண்டு ஒரு வழக்கமான சிரிப்பு இல்லாமல் போனாலும், இந்த கிறிஸ்துமஸ் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் குழந்தைகளிடம் பார்க்க முடியும். இந்த ஆண்டு (2021) நாங்கள் மேலும் நான்கு பேரை புதிததாக (பேரன், பேத்திகள்) நான்கு பேரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், இளவரசர் பிலிப்யை திருமணம் செய்த 70 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவர் இல்லாமல் மகாராணி தன்னுடைய கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுகிறார்.
இதேவேளை, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், அவர் கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் வாழ்த்து சொல்லும் போது, முகத்தில் ஒரு வித அழகான புன்னகை இருக்கும். ஆனால், இந்த முறை அவருடைய முகத்தில் அந்த புன்னகையை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.