கொலஸ்ட்ரால் முதல் நம்மை கண்ணீர் விட வைக்கும் பல நோய்களை விரட்டியடிக்கும் இந்த பழம்!
நாம் எடுத்துக்கொள்ளும் பழங்கள் அனைத்திலும் நிறைய ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் ரோஜா ஆப்பிள் என்றழைக்கப்படும் பன்னீர் ஆப்பிளில் ( ஜம்புக்காய்) நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உள்ளது .
இந்த பன்னீர் ஆப்பிள் என அழைக்கப்படும் ஜம்புக்காய் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நம்மை காக்கும் . இது நமக்கு வரும் காய்ச்சலை விரட்ட உதவும் ,மேலும் வாத சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
மேலும் இந்த ஆப்பிள் ,கை கால் வலிப்பு பிரச்சினையை தீர்த்து வைத்து நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்த்தியை வழங்குவதில் முதன்மை வகிக்கிறது . அதுமட்டுமல்லாது,
1.பன்னீர் ஆப்பிளில் உள்ள சோடியம் மற்றும் குறைவான கொலஸ்ட்ரால் அளவு பக்கவாதம் மற்றும் வீக்கம் போன்ற நோய்களை குணப்படுத்தும்.
2.இதில் ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு, இதய ஆரோக்கியம், போன்றவற்றுக்கு நல்ல மருந்து
3.மேலும் இந்த ஆப்பிள் பெருந்தமனி தடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
4.பன்னீர் ஆப்பிளில்நியாசின் மூலக்கூறு அதிக அளவு உள்ளது.
5.அதனால் இது நம் இதயத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 6.மேலும் ரத்தத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
7.பன்னீர் ஆப்பிள் தசைப் பிடிப்பை குணமாக்கி நம்மை காக்கிறது .
8. பன்னீர் ஆப்பிளில் இருக்கும் பொட்டாசியம் நம் தசைகளின் வலிமையை அதிகரித்து நம்மை காக்கிறது .