இலங்கையில் பிரபலமான சித்தாலேப நிறுவனர் காலமானார்!
உள்நாட்டு தயாரிப்பான ஆயுர்வேத தைலமான சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் தனது 84ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
அதேவேளை ஆயுர்வேத தொழில்துறைக்கு வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட ஆற்றிய பங்களிப்பை கௌரவித்து அவருக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸவினால் "தேசபந்து ” விருது அவருக்கு வழங்கப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் 50 சிறந்த இலங்கை தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடிப்பது உட்பட, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.