விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சீன நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான, சீனாவில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத புகையிலைப் பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய சீன நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை
சந்தேக நபர் இந்த புகையிலைப் பொருட்களை சீனாவில் கொள்முதல் செய்து, அவற்றுடன் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து எயர் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் ஊடாக நேற்று இரவு 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவர் கொண்டுவந்த பயணப் பைகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 20,000 சிகரெட்டுகளைக் கொண்ட 100 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்ட சீன பிரஜை, அவர் சட்டவிரோதமாகக் கொண்டுவந்த புகையிலைப் பொருட்களுடன் மீகமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.