இலங்கையில் சீன பொறியியலாளர்கள்!
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக கடந்த 2011 முதல் தற்போது வரை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் சீன பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.
இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார் .
நியமிப்பதில் தவறில்லை
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முக்கிய பராமரிப்புகளுக்காக சீன பொறியாளர்களை நியமிப்பதில் தவறில்லை எனவும் அவர் கூறினார்.
அத்துடன் உள்ளூர் பொறியாளர்களால் செய்யக்கூடிய E மற்றும் K நிலைப் பராமரிப்புப் பணிகளுக்கு சீனப் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
