வரலாற்றின் வரைபடங்களில் இருந்து மறைந்து வரும் சீன பாலைவனங்கள்
பூமியில் உள்ள பாலைவனங்களை எல்லாம் சோலைவனம் ஆக்க முனைந்தால் என்னாகும்?
பாலைவனங்களை சோலைவனங்கள் ஆக்கும் முயற்சியில் சீனா, இஸ்ரேல் மற்றும் அரபிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.
மிகவும் குறுகிய நிலத்திலேயே இந்த செயல்பாடு வழக்கமாக நடக்கும். ஆனால் சீனா மிகவும் வித்தியாசமான வகையில் பேரளவில் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
வரலாற்றின் வரைபடங்களில் இருக்கும் சீன பாலைவனங்கள் இதனால் காணாமற் போய் வருகின்றன.
மரம் நடுதலான பணி சின்னஞ்சிறு பெட்டிகளுக்குள் அடக்கப்பட்டு பார்த்து பார்த்து வளர்க்கப்படுகிறது. மரங்கள் வளரத் துவங்கியதும் விலங்குகளும் பறவைகளும் காணப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனங்கள் பச்சிளங் காடுகளாக மாற்றம் பெற்றன.
இந்நாள் வரை சீனா மூன்று பாலைவனங்களை இவ்வாறு மாற்றி அமைத்துள்ளது. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட காடுகள் தேசிய பூங்காக்காளாக்கப்பட்டன.
சாய்ஹன்பா தேசிய பூங்கா ஹீபி மாகாணத்தில் உள்ள வெய்ச்சாங் மாச்சூ என்கிற நகராட்சியில் பாலைவனமாக இருந்த சாய்ஹன்பாவின் வளர்ச்சியைப் பாருங்கள்.
முன்னாள் புகைப்படம் இந்நாள் புகைப்படங்கள் மாவுசு பாலைவனம் சாங்ஷி மாகாணத்தில் இருந்த மாவுசு பாலைவனத்தின் வரைபடத்தையும் அதன் பின்னாள் வளர்ச்சியையும் காணுங்கள்.
வரைபடம் மற்றும் முன்னாள் புகைப்படம் இந்நாள் புகைப்படங்கள் குபூக்கி பாலைவனம் கோபி பாலைவனத்தின் சீனத்தொடர்ச்சியான குபூக்கி பாலைவனத்தை புணரமைப்பத்தில் சீனா உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தோடு சேர்ந்து ஈடுபட்டுள்ளது. இதுவரை 60% பணிகள் முடிவடைந்துள்ளன.
முன்னாள் புகைப்படம் இந்நாள் புகைப்படங்கள் பாலைவனங்களை சோலைவனங்களாக்குவதன் மூலம் சீன அரசாங்கம் உழவு மற்றும் மேய்ப்பிற்கான பரப்பளவை அதிகரித்துள்ளது.
இந்த பரப்பளவானது இலங்கையின் பரப்பளவுடன் ஒப்பிடத்தகுந்தது. தொலை நோக்கில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் மக்களுக்கு உணவளிக்க இந்த நிலங்கள் பேருதவி புரியும் என்று நம்பப்படுகிறது.