சர்ச்சையை ஏற்படுத்திய உர இறக்குமதி தொடர்பில் சீன நிறுவன பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
சர்ச்சையை ஏற்படுத்திய சீன உர இறக்குமதி தொடர்பில் அந்நாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாட இலங்கை வந்தடைந்துள்ளனர்.
சிந்தாவோ பயோடெக் நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் மற்றும் தொழிநுட்ப பொறுப்பாளர் இவ்வாறு இலங்கை வந்துள்ளதுடன் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது சீன தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர். அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வௌியிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது, சீன தூதுவர் தன்னை சந்திக்க அனுமதி கோரியதாகவும், சர்ச்சைகுரிய உரம் தொடர்பிலான வழக்கு நிலுவையில் இருப்பதால். தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்டுத்த முடியாது என கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வந்த சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், மீண்டும் களுத்துறையை அண்மித்த கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.