கொழும்பில் சீன வர்த்தகரை கடத்தி 60 ஆயிரம் டொலர் கொள்ளை!
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (22) இரவு சீன வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சீன பிரஜைகள் அடங்கிய கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்டவர் கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18 வருடங்களின் பின் தாயகம் வந்த குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!
ஒரு நாள் முழுவதும் கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சந்தேக நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தன்னை வீதியோரம் விட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்ட சீன வர்த்தகர் சனிக்கிழமை (23) கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சீன வர்த்தகர் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.