இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள 1.5 பில்லியன் டொலர்கள்!
இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீனா 1.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) அறிவித்துள்ளார்.
இதேவேளை, கடன் செலுத்துகைக்காக சீனா இவ்வாறு கடன் உதவி வழங்க இருப்பதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்றால் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிட்ச் ரேடிங் (Fitch Rating) நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் ஓர் எதிர்வு கூறலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கை கடன் செலுத்துகையில் சிரமங்களை எதிர்நோக்கும் என பிட்ச் ரேடிங் (Fitch Rating) நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இதுவரையில் எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் விட்டதில்லை என அமைச்சர் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.