வடக்கில் ஆழமாக கால் பதிக்கும் சீனா; கவலையில் இந்தியா
இலங்கையின் வடக்கு உள்கட்டமைப்பு திட்டங்களில், சீனாவின் விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சிகளின் மீது இந்தியா கவலை கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
சீனா தனது கடன் கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் ஆழமான மூலோபாய ஊடுருவல்களைச் செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் வடக்கில் முடிந்தவரை இந்தியக் கடற்கரைக்கு அருகில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதியுடன் செயல்படுகிறதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
"சீன பொருளாதார செயல்பாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உத்தேசிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், பின்னர் மூலோபாய காரணங்களுக்காக சுரண்டப்படலாம் என இந்தியா கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக, சீனத் திட்டங்கள் பெரும்பாலும் தென்னிலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இப்போது வட இலங்கையிலும் பல சீன முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.