இன்று பூமிக்கு திரும்பும் சீனாவின் Chang’e 6; ஆவலோடு காத்திருக்கும் விஞ்ஞானிகள்!
சந்திரனில் இருந்து சீனாவின் Chang’e 6 விண்ணோடம் இன்று (25) பூமிக்குத் திரும்புகிறது. Chang’e 6 , சந்திரனில் சேகரித்த சுமார் 2 கிலோ கிராம் அளவான மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் வடக்கில் உள்ள மொங்கோலியாவில் இன்று Chang’e 6 தரையிறங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சந்திரனிலிருந்து திரட்டப்பட்ட அதிகப்படியான மாதிரிகளை இந்த விண்ணோடம் பூமிக்குக் கொண்டுவருதால், Chang’e 6 வருகைக்கு சந்திர ஆய்வு விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்தும் போது, பல ஆண்டுக்காலமாக நிலவி வருகின்ற சந்திரன் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது