முதுகு சொறிந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞன்; வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!
சீனாவில் இளைஞன் ஒருவர் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சம்பவம் இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா(Zhang Xiaoqiao) என்பவரால் 'சுமா' (Suma) முதுகு சொறியும் சேவை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம்
ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சேவையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நகங்களைக் கொண்டு உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுவார்கள்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படும் இந்த சேவைக்கு ஆண்களே அதிகளவில் (70 சதவீதம்) வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு காணொளியும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்த தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகமாக இருந்ததாக ஜாங் தெரிவித்துள்ளார்.
தற்போது இரண்டு கிளைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டும் அந்த இளைஞர், எதிர்காலத்தில் சீனாவில் 100 கிளைகளைத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் Zhang Xiaoqiao அதிக கவனத்தை பெற்று வருகின்றார்.