தாயின் தவறான முடிவால் பலியான குழந்தைகள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மல்வத்து ஓயாவில் சில தினங்களுக்கு முன்பு தாயாரால் தள்ளிவிடப்பட்ட உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும், குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்குமாறு அநுராதபுர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மீட்கப்பட்டனர்.

நீதவானின் உத்தரவு
இதன் போது கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தாயார் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தலைமை நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டன.