வெனிசுலா இடிபாடுகளுக்குள் பிரசவம்; துன்பத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பல அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், அந்த இக்கட்டான மரணப் போராட்டத்திற்கு நடுவே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

கான்கிரீட் குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த தாயும் சேயும்
கட்டிட சிமெண்ட் சிலாபுகள் மற்றும் கான்கிரீட் குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த நிலையிலும், தாயும் சேயும் எவ்வித ஆபத்துமின்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் , இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 920 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலநடுக்க இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 243 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது