நாட்டுக்கு உரையாற்றிய போது திடீரென குறுக்கிட்ட குழந்தை; ஓர் சுவாரஸ்ய சம்பவம்!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern)நாட்டுக்கு உரையாற்றிய போது அவரது 3 வயதான மகள் திடீர் குறுக்கிட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ஜெசிந்தா (Jacinda Ardern) நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் உரையாற்றிக்கொண்டிருந்ததை ‘முகநூல்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. அப்போது திரேனென குறுக்கீடு ஒன்று வந்தது.
அந்த குற்றுக்கீடு எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ அல்லது குடிமகனிடம் இருந்தோ அல்ல. பிரதமரின் 3 வயது மகள் நெவ்விடம் இருந்துதான் வந்தது.
பிரதமர் ஜெசிந்தா (Jacinda Ardern)உரையாற்றிக்கொண்டிருந்தபோது,
நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக்கண்டு திகைத்த பிரதமர் ஜெசிந்தா உடனே சமாளைத்துக்கொண்டு, “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” என கூறினார்.
அதோடு, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” என கூறிய அவர் கேமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” என சிரித்துவிட்டு தனது உரையை தொடந்துள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , நாட்டுக்கே பிரதமரானாலும், தன் குழந்தைக்கு அவரும் ஒரு தாய் அல்லவா என பலரும் கூறிவருகின்றனர்.