சிறுமிகள் திருமணம்; 1,800 ஆண்கள் கைது!
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிறுமிகளின் திருமணம் தொடர்பாக 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் ஹமின்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இக்கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுமிகளை திருமணம் செய்தமை அல்லது சிறுமிகளை திருமணத்துக்கு உதவியமை தொடர்பில் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான இக்குற்றம் தொடர்பில் பூச்சியம் சகிப்புத்தன்மை கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும், அவர் கூறினார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர் என அவர் கூறினார்.
மேலும் சிறுமிகள் திருமணம் தொடர்பில் 4,004 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.