பதின்ம வயது சிறுமிக்கு சகோதரிகளின் கணவர்களால் நேர்ந்த துன்பம்

Sulokshi
Report this article
12 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான சகோதரிகளின் இரண்டு கணவர்களில் ஒருவர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஈச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்
தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்களினால் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.