மரண வீட்டிற்கு சென்ற இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கணவன் வைத்தியசாலையில்
சிலாபத்தில் உள்ள பகுதியொன்றில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (02-12-2024) ஆனமடுவ வீதியில் பல்லம, பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மாதம்பை, தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஏ.இந்திரா என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விபத்துக்குள்ளான கெப் வண்டி சிலாபத்தில் இருந்து ஆனமடுவ நோக்கி சென்ற போது முன்னால் வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தின்போது பெண் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
குறித்த தம்பதியினர் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.