லொறியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான மர்ம பொருள்!
புத்தளம் - சிலாபம் பகுதியில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கூலர் லொறி ஒன்றை சோதனைக்கு உற்படுத்தியபோது உடப்பு கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்க1460 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் ஜயபிம பகுதியில் உள்ள வீடொன்றினை நேற்றிரவு சோதனைக்குற்படுத்தியபோது கூலர் லொறியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பீடி இலைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட உள்ளதாக உடப்பு கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த வீட்டை சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, 1460 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1.1 கோடி ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைமளையும், பீடி இலைகளைல் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கூலர் லொறியையும் புத்தளம் கலால் வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.