முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து ; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!
இரண்டாம் இணைப்பு
முதலமைச்சர் விஜய் மற்றும் சங்க்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக இந் திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்க்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் - சங்கீதா தம்பதியினரின் இந்த விவாகரத்து வழக்கு தொடர்பான செய்தி, இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் , பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அதேவேளை முதலமைச்சர் விஜய் சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.