வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கொடியேற்றம் இன்று!
யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பராபவ வருட மகோற்சவ கொடியேற்றம் இன்று இனிதே ஆரம்பமாகின்றது. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் வருடாந்த மகோற்சப பெரும் திருவிழாவை முன்னிட்டு நயினாதீவு பிரதீசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
15 நாட்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மகோற்சப பெரும் திருவிழா இடம்பெறும் நிலையில், இன்று (15) கொடியேற்றம் ஆரம்பமாகி 28 ஆம் திகதி தீர் திருவிழாவும், 29 ஆம் திகதி தீர்த்த உற்சபமும் இடம்பெறவுள்ளது.

51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து ம் மக்கள் நயினை அம்பாளை தரிசிக்க வருகின்றனர்.

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும்.

இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்