அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்
தமிழ் நாட்டின் அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் அனைத்திலும் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும்
“முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம்’ தற்போது செய்தித்துறையால வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் அனைத்துத் துறைகளுக்கும் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.